தஞ்சையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் விவசாயிகள் பங்கேற்பதற்காக சென்றனர்.
அப்போது அவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தைக்கண்ட அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது அவர்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.