ஜம்மு-காஷ்மீரில் டோடா உரார் பாக்கி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,
எல்லையில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருடன் தேசம் உறுதுணையாக இருப்பதாகவும், தீவிரவாதிகளை வேரறுக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். அந்த பிராந்தியத்தில் அமைதி நிலைநாட்டப்படும் என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.