காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த தமிழக அரசுக்கு உரிமை உள்ளதாக கர்நாடக துணை முதல்வரும் நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகா போல் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் காவிரி விவகாரத்தில் ஆலோசனை நடத்த உரிமை உள்ளதாக தெரிவித்தார்.
தற்போது காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து இருப்பதாகவும், ஹாரங்கியில் இருந்து 20 ஆயிரம் கன அடிக்குமேல் தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.
கடவுள் அனுமதித்தால் இருமாநிலத்துக்கு இடையிலான பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று கூறிய அவர், தண்ணீர் இருப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு நீர் திறந்து விடப்படும் என்று கூறினார்.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு கர்நாடகம் உரிய ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார்.