காவிரி விவகாரம் தொடரபாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீரை விடுவிக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டப் பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அதிமுக சார்பில் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன், பாஜக சார்பில் கரு. நாகராஜன், கருப்பு முருகானந்தம், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, பாமக சார்பில் ஜி.கே.மணி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், காவிரியில் உரிய தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவுப்படி, தமிழகத்துக்கு உரிய தண்ணீர் வழங்குமாறு ஒழுங்காற்றுக்குழு கர்நாடக அரசுக்கு மீண்டும் அறிவுறுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.