ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில் சாலையில் நின்ற மாட்டின் மீது இருசக்கர வாகன வாகனம் எதிர்பாரதவிதமாக இடித்து ஒருவர் காயமடைந்தார்.
அரக்கோணத்தை சேர்ந்த தர்மன் என்பவர், பணிகளை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று இருசக்கர வாகனம் மீது உரசியது.
இதில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதியது. பலத்த காயம் அடைந்த தர்மன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.