கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் லிஃப்டில் 2 நாட்களாக இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் ரவீந்திரன் தவித்த நிலையில், பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை லிஃப்டை ரவீந்திரன் பயன்படுத்தியபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது இடையில் நின்று பயங்கரமாக அதிர்ந்தது.
இதில் ரவீந்திரனின் கைப்பேசி சேதமடைந்ததால் அவரால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்த நிலையில், லிஃப்டில் சிக்கிய அவர், 2 நாட்கள் கழித்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து கேரள சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.