மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கன மழையால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
நெல்லையில் நீடித்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
அந்த வகையில் மணிமுத்தாறு அருவிக்கு வழக்கத்தை விட அதிக நீர்வரத்து வந்துக்கொண்டிருக்கிறது. இதனால் பாதுகாப்புக்கருதி சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.