ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களின் உடலுக்கு ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் டோடாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து அவர்களது உடல் ராணுவ நிலைக்கு எடுத்துவரப்பட்டு, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. முன்னதாக ராணுவ வீரர்களின் உடலுக்கு உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.