நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக மாயாற்றின் நடுவே உள்ள தெப்பக்காடு தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து தடை பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக, தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தெப்பக்காடு தரைப்பாலத்திற்கு மேல் காட்டாற்று வெள்ளம் செல்கிறது.
இதனால், உதகையில் இருந்து மசினகுடி, தெப்பக்காடு வழியாக கூடலூர் மற்றும் கர்நாடகாவுக்கு செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாயாற்றின் அருகே செல்ல வேண்டா3மு ஏனு பழங்குடி மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும், மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழையின் தாக்கம் குறைந்தால் மட்டுமே தரைப்பாலத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.