தஞ்சை மாவட்டம், வளம்பக்குடி அருகே, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில், 5 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கன்னுக்குடிபட்டியை சேர்ந்த பக்தர்கள், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர்.
திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதியது. இதில் . 3 பெண்கள் உள்றிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த இரு பெண்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.