விழுப்புரம் அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் தென் நெற்குணம் கிராமத்தில், தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த ஏழு மற்றும் ஒன்பது வயது சிறுமிகளுக்கு, அவர்களின் உறவினர்களே பாலியல் தொந்தரவு அளித்ததை ஆசிரியர்கள் கண்டறிந்தனர்.
அச்சிறுமிகளுக்கு சித்தப்பா, அண்ணன் போன்ற நெருங்கிய உறவு முறை கொண்ட 15 பேர் , 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது.
இது தொடர்பாக சிறுமிகளின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வினோதா, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 32 ஆயிரம் அபராதம் விதித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர், கடந்த 2019-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.