தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 15 நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளா, கர்நாடகா மாநிலங்களில், நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனைதொடர்ந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, தேனி ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
அதன்படி கடந்த 15 நாட்களில் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.