பட்டியலின் வகுப்பில் கூடுதலாக ஜாதிகளை சேர்ப்பது உள்ளிட்ட எந்த மாற்றங்களையும் மேற்கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு பீகாரில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்த ஜாதியை எஸ்.சி.பட்டியலில் சேர்த்து பீகார் அரசு அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத்தின்படி பட்டியலின் வகுப்பில் கூடுதலாக ஜாதிகளை சேர்ப்பது உள்ளிட்ட மாற்றங்களை மேற்கொள்ள எந்த மாநில அரசுக்கும் அதிகாரம் கிடையாது என தீர்ப்பளித்தது.