தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
ஜவகர் நகர் குடியிருப்பில் ஒன்றரை குழந்தை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு சென்ற தெரு நாய்கள் குழந்தையின் கை, கால், முகத்தை கடித்துக் குதறியது. இதில் படுகாயமடைந்த குழந்தையை பெற்றோர் மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனையடுத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. ஹைதரபாத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.