கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதாவிற்கு தொழில்துறையினரிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள, 50 சதவீத நிர்வாக பணிகளிலும், 75 சதவீதம் நிர்வாகம் அல்லாத பணிகளிலும் கன்னடம் தெரிந்த உள்ளூர்வாசிகளை கட்டாயம் நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போதைய சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதா பாரபட்சமானது எனவும், இதனால் கடும் பாதிப்பு ஏற்படும் எனவும் தொழில்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இம்முடிவு அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும், தனியார் நிறுவனங்களின் ஆட்களை பணிக்கு எடுக்க இதற்காக அரசு அதிகாரிகளை நியமிப்பீர்களா எனவும் மணிப்பால் கல்வி நிறுவனங்களின் தலைவரான மோகன்தாஸ் பாய் தெரிவித்துள்ளார்.