டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
5 நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்தார்.
தேசிய கல்வி கொள்கைக்கு மாற்றாக தமிழக அரசு மாநில கல்வி கொள்கை தாயாரித்துள்ளது. அதேபோல் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் கேட்டு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சூழலிலும் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.