மது வகைகளை ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் திட்டம் இருந்தால் அதை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீடுகளுக்கே சென்று மது வகைகளை விற்பனை செய்ய திட்டம் உள்ளதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மது வகைகளை ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் திட்டம் இருந்தால் அதை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த முதலமைச்சர் மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
திட்டத்தை கைவிடாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் எனவும் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.