ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை சொமாட்டோ, ஸ்விக்கி போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.
அதனை செயல்படுத்துவது குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுவை அறிமுகம் செய்யும் திட்டமும் இல்லை எனவும் டாஸ்மாக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.