கர்நாடக மாநிலம் சிரூர் பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் தாத்தையங்கார்பட்டியை சேர்ந்த சின்னண்ணன் என்பவர், லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
பணி நிமித்தமாக கர்நாடக மாநிலம் சிரூர் பகுதிக்கு சென்ற சின்னண்ணன் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதனால் மனவேதனை அடைந்த மனைவி கீதா தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.