ஈரோட்டில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை சாலையோரம் வீசிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ரங்கம்பாளையம் தனியார் மருத்துவமனை அருகே பச்சிளம் குழந்தையை கட்டைப்பையில் வைத்து மர்ம நபர்கள் சாலையில் வீசிச் சென்றுள்ளனர்.
குழந்தையின் அழுகுரல் கேட்ட அப்பகுதி மக்கள் சிசுவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.