சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
கழனிவாசல் கிராமத்தில் இரட்டைக்குளத்து முனீஸ்வரர் கோயில் 67 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இதில் சிவகங்கை,மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 37 ஜோடி மாடுகள் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.