கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இடுக்கியில் உள்ள கல்லார் குட்டி அணை முழு கொள்ளவை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டு பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆலுவாவில் உள்ள சிவன் கோயில் மற்றும் மணப்புரம் பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கோயிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.