படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஆறுதல் தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி அவரது வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு சென்ற மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்