கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முறைகேடு செய்வதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவியதாக சென்னை வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பிரித்விராஜை சிபிசிஐடி காவலர்கள் கைது செய்தனர்.
கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சொத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்வதற்கு, தொலைந்த ஆவணத்தை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்பதற்கான NON TRACEABLE சான்றிதழை வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் இருந்து போலியாகப் பெற்றது விசாரணையில் தெரியவந்தது.