டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில். சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிரான கெஜ்ரிவாலின் மனுவை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
விடுமுறை தினத்தில் வழக்கை நடத்திய நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார்.
பின்னர் சிபிஐ கைதுக்கு எதிராக தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். அதேபோல் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் கேட்ட மனுவையும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.