மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 முக்கியத் தலைவர்கள் விலகி உள்ளனர்.
அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய 4 முக்கியத் தலைவர்களும் மூத்த தலைவர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி அணியில் சேர உள்ளனர். பிம்ப்ரி சின்ச்வாட் பிரிவின் தலைவரான அஜித் கவாஹனே, மாணவர் தலைவர் யாஷ் சானே, ராகுல் போஸ்லே மற்றும் பங்கஜ் பாலேகர் ஆகியோர் அஜித் பவார் அணியில் இருந்து வெளியேறியுள்ளனர்.