தஞ்சை மாவட்டம், வளம்பக்குடி அருகே, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில், 5 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தஞ்சை-திருச்சி நெடுஞ்சாலையில், சமயபுரம் கோவிலுக்குப் பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது வாகனம் மோதிய விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாலைகளில் செல்லும்போது, பக்தர்கள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறும், கூடுமானவரையில், நெடுஞ்சாலைகளில் நடந்து செல்லும் போது Reflector Jacket போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து செல்லுமாறு அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.