இந்திய மதிப்பில் 83 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தும் பார்க்கும் வேலையை உதற மறுத்த உணவக ஊழியரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பணி செய்யும் இடத்தில் விசுவாசமும், பணியின் மீது மரியாதையும் வைத்திருக்கும் ஊழியர்களை கண்டுபிடிக்கும் வகையில் நிகழ்ச்சிக்கு தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்தது.
அவர்கள், சில ஊழியர்களிடம் அதிக பணத்தை காட்டி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை உடனடியாக விட்டுவிடுவீர்களா? என கேட்டு வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் வென்ற உணவக ஊழியருக்கு குறிப்பிடத்தக்க தொகை பரிசாக வழங்கப்பட்டதுடன், உணவக நிறுவனமும் பாராட்டியுள்ளது. இந்த வீடியோவை எக்ஸ் வலைதளத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் கண்டு ரசித்துள்ளனர்.