கன்னடர்களுக்கே வேலை கர்நாடக மசோதாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு! - மசோதா நிறுத்திவைப்பு!
Aug 12, 2025, 11:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னடர்களுக்கே வேலை கர்நாடக மசோதாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு! – மசோதா நிறுத்திவைப்பு!

Web Desk by Web Desk
Jul 18, 2024, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் அனைத்து தனியார் தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் 100 சதவீதம் கன்னடகாரர்களுக்குக் கட்டாய இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

கர்நாடகாவில் மாநில மக்களுக்கே தொழில்நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே வலுத்து வருகிறது.

இதற்காக கன்னடர்களுக்கு இட ஒதுக்கீட்டை பரிந்துரை செய்த சரோஜினி மகிஷி அறிக்கையை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு கன்னட அமைப்புக்கள் குரல் கொடுத்து வந்தன.

இந்நிலையில், முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் கட்டாயம் 100 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.

இந்த தகவலை கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது அதிகார பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். விரைவில், கர்நாடக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டு , இந்த மசோதா சட்டமாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் நிர்வாகப் பணிகளில் 50 சதவீத பணிகளும் , நிர்வாகம் அல்லாத பணிகளில் 75 சதவீத பணிகளும் கன்னடர்களுக்கு கட்டாயம் வழங்கவேண்டும் என்று இந்த புதிய மசோதாவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

யார் கன்னடர்கள் என்பதையும் இந்த மசோதா வரையறுத்திருக்கிறது. அதன்படி கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கும் மேல் கர்நாடகாவில் வசித்து, கன்னட மொழியை தெளிவாக எழுத பேசவும், படிக்கவும் தெரிந்தவர்கள் கன்னடர்கள் என வரையறுக்கப் பட்டிருக்கிறது. இவர்களுக்குக் கட்டாயம் இந்த இட ஒதுக்கீட்டில் பணி வழங்க வேண்டும் என்றும் இந்த மசோதாவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், மேல்நிலைப்பள்ளியில் கன்னடத்தை ஒரு மொழியாக படித்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அல்லது கர்நாடக அரசால் அங்கீகரிக்கப் பட்ட அமைப்பால் குறிப்பிடப்பட்ட கன்னட மொழி புலமை பெற்றிருக்க வேண்டும் என்றும் இம் சோதா தெரிவிக்கிறது.

மேலும் இந்த மசோதாவில், ஒரு வேளை, தேவைப்படும் பணிகளுக்குத் தகுதியான உள்ளூர் நபர்கள் கிடைக்கவில்லை எனில், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அரசாங்கத்துடன் இணைந்து,கன்னடர்களுக்கு 3 ஆண்டு பயிற்சி வழங்கி பணியில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் கூறப் பட்டுள்ளது.

இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 10,000 ரூபாய் முதல் 25000 ரூபாய் வரை அபராதமும், மேலும் இட ஒதுக்கீடு வரும் வரை குறிப்பிட்ட நிறுவனம் தினமும் , 100 ரூபாய் அபராதமாக கட்ட வேண்டும் என்றும், கன்னடர்களுக்கு பணி நியமனம் வழங்காத நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மீது அரசு நடவடிக்கை பாயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னடர்களுக்கு முன்னுரிமை தரும் இந்த சட்டத்தை நடைமுறைபடுத்துவது ரொம்ப கடினம் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, சில இந்திய மாநிலங்களில் இது போன்று சட்டங்கள் இயற்றப்பட்ட நிலையில், உள்ளூர் காரர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது , ஒரு இந்தியரின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

உள்ளூர் காரர்களை பணியமர்த்தும் மசோதா இந்த மசோதா, கர்நாடகாவில் கன்னட மக்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்காக கொண்டு வரப் பட்டதாக தெரிவிக்கப் பட்டாலும், இந்த மசோதாவுக்கு பல்வேறு தொழில் நிறுவனத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

பயோகான் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் கிரண் மசூம்தார்-ஷா, தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் இந்த மசோதா உள்ளது என்றும், தொழில் விரோத மசோதா அனுமதிக்கப்படக் கூடாது என்றும், திறமையான பணியாளர்ளை நியமிக்கும் விதிலக்குகள் இந்த மசோதாவில் இல்லை என்று கூறியிருக்கிறார்.

இது போல, இந்த மசோதா பாசிச எண்ணத்தில் உருவாகியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ள மணிப்பால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் தலைவர் மோகன்தாஸ் பாய், இந்திய அரசியலமைப்புக்கு விரோதமான மசோதா இது என்று கூறியிருக்கிறார்.

ASSOCHAM கர்நாடகாவின் இணைத் தலைவரும், YULU இன் இணை நிறுவனருமான ஆர்.கே. மிஸ்ரா, இந்த மசோதா, இந்திய தகவல் தொழில்நுட்பம் துறைக்கு பெரும் ஆபத்தாக முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இந்நிலையில், முதல்வர் சித்தராமையா நேற்று இரவு வெளியிட்ட வலைதள பதிவில், ‘மசோதா, தொடக்க நிலையில் உள்ளது. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து, ஒப்புதல் அளித்த பிறகு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார். எதிர்ப்பு காரணமாக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags: Strong opposition to the Karnataka bill that works for Kannadas!
ShareTweetSendShare
Previous Post

ராமர் பாலத்தின் துல்லியமான வரைபடம் வெளியீடு!

Next Post

10 சிம்கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை!

Related News

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

ஒன்றுடன் ஒன்று மோதிய சீன கப்பல்கள் : பிலிப்பைன்ஸ் படகை துரத்தியபோது விபரீதம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

வனங்களின் பாதுகாவலன்!

செந்தில் பாலாஜி தரப்பு மனு தள்ளுபடி!

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

காட்டு யானை தாக்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம்!

கரூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies