தனிநபர் ஒருவரது பெயரில் 10 சிம்கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெரும்பாலான குற்றங்கள் தொலைபேசி வாயிலாகவே நடைபெறுகின்றன.
உதாரணமாக, வங்கியிலிருந்து பேசுவது போல் OTP எண்களைப் பெற்று பொதுமக்களிடம் மோசடி செய்வது குறித்து ஏராளமான புகார்கள் பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தொலைபேசி பயன்பாட்டில் புதிய நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. இதன்படி, ஒருவர் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை தனது பெயரில் வைத்திருக்கலாம்.
அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற பதற்றமான மாநிலங்களில் ஒருவர் அதிகபட்சமாக 6 சிம்கார்டுகள் வரை மட்டுமே வைத்திருக்க முடியும்.
ஒருவர் அதிகமான சிம்கார்டுகள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் 2 லட்சம் ரூபாய் வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்க வழி செய்யும் வகையில் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.