நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக அப்பர் பவானி மின் உற்பத்தி நிலையத்திற்கு செல்லும் வழியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூக்கூர்த்தி தேசிய பூங்கா மற்றும் அப்பர் பவானி மின் உற்பத்தி நிலையம் செல்லும் சாலையில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனையத்து அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்ப்புப்பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிஅப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.