ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆன்மீக வளர்ச்சிக்கான முக்கியத் தலமாக விளங்குவதாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற காஞ்சி சங்கர மடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு ஆலய நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கோயில் கருவறைக்குள் சென்ற சுவாமிகள் சிவலிங்கத்திற்கு கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்து 30 நிமிடம் வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்மீக வளர்ச்சிக்கு இக்கோயில் முக்கிய தலமாக திகழ்வதாக தெரிவித்தார்.
விரைவில் கல்வி சேவை திட்டம் தொடங்கப்படும் என்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.