ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி சாலையின் நடுவே வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்நாடு மாவட்டம் வினுகொண்டா அருகே, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இளைஞர் பிரிவைச் சேர்ந்த ஷேக் ரஷீத் என்பவரை, ஷேக் ஜிலானி என்பவர், சாலையின் நடுவே இரு கைகளையும் துண்டித்ததோடு, கட்டையால் பயங்கரமாகத் தாக்கி கொலை செய்தார்.
தனிப்பட்ட காரணங்களால் இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதாகவும், அரசியல் பின்னணி எதுவும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.