தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சியினரின் கொலைகள் அதிகரித்து வருகிறது.
மாநிலம் முழுவதும் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் எப்போதும் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.