நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் கூண்டிற்குள் கட்டப்பட்டிருந்த வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்று வேட்டையாட முயன்றது.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ள நிலையில் கொட்டக் கம்பை பகுதியில் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை அங்கு கூண்டுக்குள் கட்டப்பட்டிருந்த வளர்ப்பு நாய்களை வேட்டையாடுவதற்காக முயன்றது. ஆனால் கூண்டிற்குள் நுழைய முடியாததால் சிறுத்தை திரும்பி சென்றது.