உத்தர பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் விகாஷ் தூபே என்ற இளைஞர் 40 நாட்களில் தன்னை 7 முறை விஷப்பாம்புகள் கடித்ததாக தெரிவித்துள்ளார்.
பதேபூர் ஆட்சியர் இந்துமதியின் உத்தரவின்பேரில் மருத்துவர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விகாஸ் தூபேவை இதுவரை ஒரு முறை மட்டுமே பாம்பு கடித்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு மனநல சிகிச்சை தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.