அமுல் நிறுவனத்தின் மோர் பாக்கெட்டில் புழுக்கள் நெளிந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கஜேந்திர யாதவ் என்ற நபர் ஒருவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அன்மையில் அமுல் நிறுவனத்தில் வாங்கிய மோர் பாக்கெட்டில் புழுக்கள் நெளிந்ததாகவும், இதனால் தான் மிகுந்த மன வேதனை அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவு வைரலான நிலையில் அமுல் நிறுவனம் தற்போது அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.