கமலா ஹாரிஸ் ஒரு சிறந்த துணை அதிபர் மட்டுமல்ல, அவர் அமெரிக்காவின் அதிபராகும் தகுதி படைத்தவர் என அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் ஜோபைடன் களமிறங்குகிறார். ஜோபைடன் உடல் நலக்குறைவால் தேர்தல் பிரசாரங்களில் சரியாக ஈடுபட முடியாததால் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரை மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
அந்த சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் ஜோபைடன் தெரிவித்த கருத்துக்களால் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.