சீனாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிச்சுவான் மாகாணத்தின் ஜிகோங் நகரில் உள்ள 14 மாடி கட்டடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடம் சென்ற தீயணைப்புத்துறையினர் கட்டத்திற்குள் சிக்கியிருந்த 75 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி இதுவரை 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.