தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அரசின் சலுகைகளை வழங்க வேண்டும் என தென்கொரிய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அரசின் சலுகைகளை வழங்க வேண்டுமென என தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தென் கொரியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அரசின் முக்கிய சலுகைகளை வழங்க உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பு மூலம் தேசிய சுகாதார காப்பீடு திட்ட பலன்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கணவன், மனைவி என்ற நிலையில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக அந்நாட்டில் கருதப்படுகிறது.