தகாரைக்காலில் அரசு பள்ளி மாணவி லித்யா ஸ்ரீ ஒருநாள் மாவட்ட ஆட்சியராக தேர்வு செய்யப்பட்டார்.
காரைக்கால் மாவட்டத்தில், பள்ளி மாணவர்கள் மாவட்ட நிர்வாக செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ளும் விதமாக ஒருநாள் மாவட்ட ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
அதன்படி ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவி லித்யா ஸ்ரீ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் இருக்கைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு இருக்கையில் அமர்ந்த லித்யா ஸ்ரீ, துறை வாரியான கோப்புகளை ஆட்சியருடன் இணைந்து ஆய்வு செய்தார்.