அமலாக்கத்துறை கைதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் உள்ளார்.
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.