நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷிற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மோசடி செய்து அபகரித்ததாக கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமின் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.