ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இலங்கை முல்லைத்தீவு பாண்டியன் குளத்தை சேர்ந்த விஜிதா, கடந்த ஆண்டு சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளார்.
விஜிதாவின் விசா காலம் முடிவடைந்ததையடுத்து சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இதனையடுத்து ராமேஸ்வரம் வந்த விஜிதா சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்றார். இதனை அறிந்த கடலோர காவல்துறையினர் விஜிதா உள்பட 3 பேரை கைது செய்தனர்.