பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் அதிக பதக்கம் வெல்ல வேண்டுமென இந்தியா கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியை, இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அணியில் 117 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். இது குறித்து பேசிய கபில்தேவ் இந்திய அணி வீரர்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டால் ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் பதக்கத்தை வெல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.