இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை செல்லவுள்ள இந்திய அணி அந்நாட்டு அணிக்கு எதிரான 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா துணைக் கேப்டனாக செயல்பட்ட நிலையில், தற்போது சூர்யகுமார் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாகவும், சுப்மன்கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் ஜெய்ஸ்வால், உள்ளிட்ட வீரர்கள் களமிறங்குவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.