கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து 4வது நாளாக பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அவலாஞ்சி, அப்பர், பவானி போன்ற அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பில்லூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 4வது நாளாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்வதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.