நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக மண் சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 12 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும் நீர்ப்பிடிப்பு பகுதியான அவலாஞ்சியில் பெய்துவரும் கனமழை காரணமாக எமரால்டு,பவானி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.