மதுரை கப்பலூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தின் தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் காவலாளி உயிரிழந்தார்.
கப்பலூர் சிப்காட்டில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக வந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து காவலாளி மீது மோதியது.
இந்த விபத்தில் காவலாளி சாலமுத்து உயிரிழந்த நிலையில் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.