மேட்டுப்பாளையம் தூத்துக்குடி வாரந்திர ரயில் சேவை மக்கள் பயன்பாட்டினை பொறுத்து நிரந்தரமாக்கப்படும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வாராந்திர ச ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் ரயில் சேவைக்காக 6000 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி அளித்துள்ளதாக தெரிவித்தார். இந்த ரயில்சேவையை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதாகவும், மக்கள் பயன்பாட்டை பொறுத்து நிரந்தரம் ஆக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
வாரத்தில் வியாழன் மற்றும் சனிக்கிழமை தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்தும் அதேபோல மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் மட்டும் இயக்கப்படும் வகையில் இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது